உலகக் கோப்பை தொடரின் 17வது போட்டியில் ஆஸ்திரேலியா– பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய
கேப்டன் ஃபின்ச், வார்னர் இருவரும் அருமையாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 146 ரன் சேர்த்தனர்.
ஃபின்ச் 82 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அனைத்து வீரர்களும்
சொற்ப ரன்னிலேயே அவுட்டாயினர். வார்னர் மட்டும் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார்.
ஆஸ்திரேலியா 49 ஓவரில் 307 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.